கர்நாடகாவில் மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து: பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

Must read

பெங்களூரு: கர்நாடகாவில் மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களும்  கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில்  கொரோனா தொற்று கையை மீறி சென்று விட்டதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்திருந்தார்.

அம்மாநிலத்தில் தற்போது வார இறுதி நாள்களிலும், இரவு நேரங்களிலும் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந் நிலையில் பொதுமுடக்க நேரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்படுவதாக பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அறிக்கையை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவையை தொடர்ந்து கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம் மற்றும் பெங்களூரு பெருநகர போக்குவரத்து கழகம் ஆகியவைகளும் பொதுமுடக்க நேரங்களில் தங்களது சேவைகளை ரத்து செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More articles

Latest article