கொல்கத்தா,

மேற்கு வங்காள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜியின் தலையை கொண்டுவருபவருக்கு ரூ11 லட்சம் தருவதாக அறிவிப்பு வெளியிட்ட பா.ஜனதா இளைஞரணித் தலைவர் யோகேஷ் வர்ஸ்னே தலைக்கு ரூ. 22 லட்சம் பரிசு  அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

மம்தா பானர்ஜி – யோகேஷ் வர்ஸ்னே

மேற்கு வங்காள மம்தா பானர்ஜியின் தலைக்கு பா.ஜனதா இளைஞரணி தலைவர் யோகேஷ் வர்ஸ்னே பரிசு அறிவித்தது குறித்த விவகாரத்தை இன்று பாராளுமன்ற இரு அவைகளிலும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சி என அனைத்து அரசியல் கட்சிகளும்   எழுப்பின.

 

இதையடுத்து  பாராளுமன்றமும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக யோகேஷ் வர்ஸ்னேவுக்கு எதிராக கொல்கத்தாவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்

இந்த நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தில் மிகவும் பிரபலமான கொல்கத்தா திப்பு சுல்தான் ஷாஹி மசூதியின் இமாம் நூர்-உர் ரகுமான் பார்காதி இந்துஸ்தான் டைம்ஸ்க்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், ““மம்தா பானர்ஜி எங்களுடைய மரியாதைக்குரிய தலைவர், அவரை என்னுடைய சகோதரியாக கருதுகின்றேன். பாரதீய ஜனதா கட்சியின் இளைஞரணித் தலைவர் யோகேஷ் வர்ஸ்னே தலையை கொண்டு வருபவருக்கு நான் ரூ. 22 லட்சம் பரிசாக வழங்குகிறேன்” என்று இமாம் நூர்-உர் ரகுமான் பார்காதி தெரிவித்துள்ளார்.

இவர், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சல்மான் ருஷ்டி போன்றோர்களுக்கு பத்வா விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.