
மீரட்:
உ.பி., மருத்துவ கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவில் பெல்லி டான்ஸ் ஆடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி.யில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கிறிஸ்துமஸ் தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த1992ம் ஆண்டு இக்கல்லூரியில் பயின்ற மருத்துவர்கல் இதில் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ஆம்புலன்ஸில் மதுபாட்டில்கள் கொண்டுவரப்பட்டு பரிமாறப்பட்டது. மேலும் ரஷ்ய பெல்லி டான்ஸ் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வீடியோ ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் வெளியானது. இதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்
Patrikai.com official YouTube Channel