டில்லி : 

ரெயில்களில், ஜன்னலோர  இருக்கைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

கடந்த செப்டம்பரில், பண்டிகை காலங்களின்போது பயன்செய்யும்போது, பிளக்சி பேர் எனப்படும் புதிய திட்டத்தை ரெயில்வே வாரியம் அமல்படுத்தியது. அதன்படி    பண்டிகை நாட்கள் மற்றும் கோடை விடுமுறையில், பயணியரின் கூட்டத்திற்கேற்ப கட்டணங்களை உயர்த்தும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது.

இந்த திட்டத்தின்படி  ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ போன்ற ரயில்களில் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 30 சதவிகித இருக்கை வழக்கமான கட்டடத்துடனும், அதைத்தொடர்ந்து ஒவ்வொரு 10 சதவிகித இருக்கைக்கு ,10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படும் என்றும்,  பயண நாள் வரையில், 50 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ரெயில் பயணத்தின்போது பொதுவாக அனைவரம்  ஜன்னலோர இருக்கையை விரும்புவார்கள். தற்போது இதுபோன்ற ஜன்னலோர இருக்கை மற்றும் சைடு பெர்த் போன்றவற்றுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் ரெ ல்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பு விரைவில் அமலுக்கு வரும் என தெரிகிறது.