புதுடில்லி: செவ்வாய்க்கிழமை இரவு, பெல்ஜியத்தில் உள்ள புருசெல்ஸ நகரத்திற்கு பணி நிமித்தம் சென்றுள்ள இந்தியர்கள் மற்றும் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்குக் கவனமுடன் இருக்க அறிவுரை வெளியிட்டுள்ளது.
புருசெல்ஸ நகரம்மீதான தீவிரவாதத் தாக்குதலில் 35 பேர் மரணமடைந்துள்ளனர் மேலும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். எனவே இந்தியர்கள் வெளியில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனம் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்து பயண அறிவுரையை வெளியிட்டுள்ளது.
தன்னுடைய ஆலோசனைக் குறிப்பாக நெரிசலான இடங்களில், குறிப்பாக நகர மையங்களுக்கு தேவை இல்லாமல் செல்வதைத் தவிர்க்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கும்படியும் மற்றும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாமெனவும் பெல்ஜியத்தில் வாழும் இந்தியர்களைக் கேட்டுக் கொள்கின்றது.
பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பெல்ஜிய அரசு, சவென்டம் விமான நிலையம் மற்றும் மேல்பீக் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அதிகப் படியான பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதை யடுத்து, இந்தியர்கள் விழிப்புடன் இருந்து கவனமாகச் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.
புருசெல்சில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லா நேரங்களிலும், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எங்கிருக்கிறார்கள் எனும் தனிப்பட்ட தகவலைப் பகிர்ந்து கொள்ளுமாறும் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெறுமாறும் இந்தியர்கள் கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். “
மேலும், “வீட்டில் தங்கி இருக்கவும் ! பாதுகாப்பாக இருக்கவும்” என அனைத்து பெல்ஜிய இந்தியர்களுக்கும் இந்தியத் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
“பெல்ஜியம் சென்றுள்ள இந்திய பயணிகள் உட்பட, இந்தியச் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்கள், தங்கள் அன்றாட வாழ்க்கை மற்றும் பொது வெளியில்அன்றாடத் தேவைக்காகச் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் மற்றும் விழிப்புடன் இருக்குமாறு கோருகிறோம். தூதரகத்தை அதன் தொலைபேசி எண்கள் +32 2 640 91 40 அல்லது அல்லது +32 2 645 1850 எண்ணிலோ மற்றும் மொபைல் எண் +32 476 748 575 –ல் தொடர்பு கொள்ளலாம்” என அறிவுரைத் தகவல் வெளியிட்டுள்ளது.
இரண்டு ஜெட் ஏர்வேஸ் விமானிக்குழு உறுப்பினர்கள் புருசெல்ஸ் குண்டுவெடிப்பில் காயமடைந்தனர். எனவே, பெல்ஜியத் தலைநகரான புருசெல்சிலிருந்து புதன்கிழமை வரை அதன் அனைத்து விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
“புருசெல்லில் தவித்து வந்த ஜெட் பயணிகள் விமான நிலையத்திலிருந்து பத்திரமாக இடமாற்றப்பட்டு அவர்களுக்கு உணவு மற்றும் இடவசதி வழங்க ப்பட்டு வருகின்றன “ என ஒரு ட்வீட்டில் தூதரகம் தெரிவித்துள்ளது.