சென்னை: பி.எட். படிப்பிற்கான கலந்தாய்வு இன்று முதல் 5 நாட்களுக்கு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7அரசு மற்றும் 14 உதவி பெறும் பிஎட் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை கல்வியியல் (பிஎட்) படிப்புகளுக்கு 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள்,விண்ணப்பம் செய்வதற்கான தேதி, கலந்தாய்வு துவங்கும் தேதி ஆகியவற்றை கல்லூரி கல்வி இயக்குனரகம் செப்டம்பர் 23ந்தேதி வெளியிட்டது.

அதன்படி, செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 3 ந் தேதி வரை https://www.tngasaedu.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக் அறிவுறுத்தப்பட்டதுடன்,  அக்டோபர் 6ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.  அக்டோபர் 12ஆம் தேதி முதல் கலந்தாய்வு துவங்கும் ஏற்கனவே என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று கலந்தாய்வு தொடங்கி உள்ளது.  பிஎட் படிப்புக்கான சேர்க்கைக்கு 4,939 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.  இவர்களின் விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வந்த நிலையில்,  மதிப்பெண் அடிப்படையில் பாடவாரியாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதையடுத்து இன்று (அக்டோபர் 12-ம் தேதி) கலந்தாய்வு தொடங்கியது.

தமிழநாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பிஎட் கலந்தாய்வை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  பி.எட். படிப்பிற்கான கலந்தாய்வு இன்று முதல் 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது என்றும்,   பி.எட். படிப்பில் சேர அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இந்த ஆண்டு 2,040 பி.எட். படிப்பு இடங்களுக்கு 5,138 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

பிட் எட்  மாணவர் சேர்க்கையில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட உள்ளது. இந்த படிப்பில் சேல பட்டியலினத்தவர்கள் 40 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 43 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் 45 சதவீதம், பொதுப்பிரிவினர் 50 சதவீதம் மதிப்பெண்களை இளங்கலை படிப்புகளில் பெற்றிருக்க வேண்டும். இணையான படிப்புகள் என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் இளங்கலை அல்லது முதுகலை முடித்திருந்தாலும், தொடர்புடைய படிப்புகளில் பி.எட்.,சேரலாம் என அறிவிக்கப்பட்டது.