5 மாதம் வரை பியூட்டி பார்லர் செல்வதைத் தவிருங்கள்

பியூட்டிசியன் ஹேமா பாண்டியன் வழங்கும் அழகுக் குறிப்புகள்:

ர்ப்பகாலத்தில்  நம் உடலில்  பலமாற்றங்கள் நடைபெறுகின்றன. .இந்த நேரத்தில்  உடல்பருமன்,முடி உதிர்தல், பொலிவுற்று காணப்படுதல் என பல பிரச்சனைகள் தோன்றும். நம் வீட்டில் எவ்வளவுதான் அழகை பாரமரித்தாலும் இந்த நேரத்தில் பார்லரின் ஆலோசனை மிகவும் அவசியம்.

முகம் கருமையாக தோன்றும்  கண்ணில்  கருவளையம் ஏற்படும். கர்ப்பகாலத்தில் 5 மாதத்திற்குப் பிறகே பார்லர் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் வாந்தி,மயக்கம் குறைந்திருக்கும். இந்தகாலகட்டத்தில் பியூட்டி பார்லர் சென்று அழகுபடுத்தி கொள்ளலாம் என்றாலும் வேதியல் பொருள் கொண்டு பேஷியல் செய்ய கூடாது.

ஹேமா பாண்டியன்

ப்ரூட் பேஷியல், காய்கறி பேஷியல் செய்துகொள்ளலாம். எக்காரணம் கொண்டும் அழுத்தமான மசாஜ்,பிரஸ்சர் கொடுக்க கூடாது.

தக்காளி, தயிர் கொண்டு கிளன்சிங் செய்ய வேண்டும். பிறகு அரிசி மாவு,எலுமிச்சை சாறு அல்லது சுகர் கலந்து ஸ்கிரப் செய்யலாம். ஸ்கிரப் பழங்களைக் கொண்டும் செய்யலாம். மாதுளை, சப்போட்டா, சீதாபழம் இவற்றுள் ஒன்றை துருவி அல்லது பேஸ்ட்டாக கொண்டும் ஸ்கிரப் செய்யலாம். பப்பாளிபழம், ஸ்ட்ராபெரி, ஆப்பிள், வாழைப்பழம், தேன், ஆரஞ்சு இதனை கொண்டு பார்லரில் மென்மையாக 15 நிமிடம் அழுத்தம் இல்லாமல்.  மசாஜ் தருவார்கள்

பின் மிதியுள்ள பழக்கூழில் கடலைமாவு அல்லது பச்சைபயிறு மாவு கலந்து பேக் போடவேண்டும். இதனை மாதம் ஒரு முறை ;செய்யலாம். பிறகு வீட்டிலேயே கருவளையம் வராமல் இருப்பதற்கு பால் வைத்து முகத்தைதுடைத்து விட்டு வெள்ளரிக்காய் சாறுடன்  உருளைகிழங்கு மசித்து இரண்டையும் கலந்து பேஷ்பேக் போடவேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இயற்க்கையான  உணவை உண்பதாலும் இயற்க்கை சத்துகளை நாம் உடலின் மேல் பூசுவதாலும் நாம் நம்மை அழகுடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம். பால், தயிர், தக்காளி, தேன் கலந்து தினமும் முகத்தை சுத்தம் செய்யலாம்.

முடி உதிர்வை தடுக்க சில குறிப்புகள்.

5 மாதத்திற்கு பிறகு ஆயில் மசாஜ் எடுத்துக் கொள்ளலாம். பல எண்ணெய் கலவைகளை மிதமான சூடுல் தலையில் மசாஜ் அழுத்தம் இல்லாமல் 15 நிமிடம் கொடுக்க வேண்டும். பின் புரோட்டின் பவுடர் கொண்டு முடி வேரில் பூசவேண்டும். பிறகு ஸ்டீமர் எடுக்க வேண்டும்.  ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் நமக்கு டென்ஷன் இல்லாமல் இருக்கும்  முடி உதிர்வது குறையும். சத்தான உணவுகள் அழகிற்கும் ஆரோக்கியமான  வாழ்க்கைக்கு அவசியம்.

(மீண்டும் சந்திப்போம்)


English Summary
beauty-tips Avoid going to the Beauty Parlor for up to 5 months