குமரேசன் (kumaresan Asak ) அவர்களின் முகநூல் பதிவு:
wife_1985727g
“கணவனின் கட்டளையை மனைவி மீறினால்…
அவன் விருப்பப்படி ஆடையணிய அவள் மறுத்தால்…
உடல் தொடர்புக்கு ஒத்துழைக்கவில்லையானால்…
முகத்திரை அணியாமல் வெளியே போனால்…
வேற்று மனிதர்களுடன் உரையாடினால்…
உரக்கக் குரலெழுப்பிப் பேசினால்…
கணவனின் ஒப்புதல் பெறாமல் பண உதவிகள் செய்தால்…
மனைவியைக் கணவன் “இலேசாக” அடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.”
– பாகிஸ்தான் நாடாளுமன்றம் இப்படியொரு சட்டம் கொண்டுவருவதற்கு இஸ்லாமிய சித்தாந்த சபை (கவுன்சில் ஃபார் இஸ்லாமிக் ஐடியாலஜி – சிஐஐ) என்ற அமைப்பு பரிந்துரைத்துள்ளது. நாடாளுமன்றத்திற்குப் பரிந்துரைகள் அளிப்பதற்கு அதிகாரம் உள்ள, அந்நாட்டின் அரசமைப்பு சாசனப்ப்பூர்வ  அமைப்பு இந்த சிஐஐ.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அரசு, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளைத் தடை செய்து சட்டம் கொண்டுவந்துள்ளது. அந்தச் சட்டத்தை ஏற்கவியலாது என்று கூறியுள்ள சிஐஐ, பெண்களுக்கு இவை போன்ற பல தடைகளை விதிக்கப் பரிந்துரைக்கும் 163 பக்க ஆவணத்தை பாகிஸ்தான் அரசுக்கு அளித்துள்ளது.
பக்கத்து நாடு என்பதால் அல்ல, உலகின் எந்தப் பகுதியில் இப்படியொரு சட்டம் கொண்டுவரப்பட்டாலும் கடும் கண்டனம் தெரிவிப்போம். பெண்ணுரிமை அமைப்புகள் மட்டுமல்ல, மனித உரிமை இயக்கங்கள் அனைவருமே சேர்ந்து எதிர்ப்போம். எந்த மதமானாலும் அடிப்படையில் பெண்ணுரிமைக்கு எதிரானதுதான் என்பது மேலும் உறுதியாவதை எடுத்துரைப்போம்.
எந்தக் கடவுளை வணங்குகிற பெண்களானாலும்   அவர்களை இப்படிப்பட்ட ஒடுக்குமுறைகளிலிருந்து காத்திடக் குரல் கொடுப்போம். பாகிஸ்தானைக் காட்டி, இங்கேயும் இப்படிப்பட்ட சட்டம் வேண்டும் என்று யாரேனும் கிளம்பினால் தடுப்பதற்குத் தோள் கொடுப்போம்.