டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால்,  அவர்களுக்கு உதவும் வகையில் ரூ.12கோடி மதிப்பிலான 2,000 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் வழங்க  இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக ஐபிஎல் உள்பட பல போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையில் தொற்று அதிகரிப்பு காரணமாக நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ ஆக்சிஜனுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, ஆக்சிஜன் தயாரிப்பதில்,கான்சென்ட்ரேட்டர் இறக்குமதி செய்வதிலும் மத்திய, மாநில அரசுகள் மும்முரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில்,  இந்தியாவுக்கு தலா 10 லிட்டர் ஆக்சிஜன்  செறிவூட்டும் வகையில், 2,000 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்களை வழங்குவதாக பிசிசிஐ அறிவித்து உள்ளது. அடுத்த சில மாதங்களில், இந்த கான்சென்ட்ரேட்டர்கள் (Oxygen Concentrators) நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த 10 லிட்டர் ஆக்ஸிஜன் செறிவூட்டியின் விலை, ரூ. 60 ஆயிரம்  முதல் 1 லட்சம் வரை இருக்கும், சுமார் 12 கோடி ரூபாய் செலவில் 2000 செறிவூட்டிகளை வழங்க தீர்மானித்துள்ளோம்.

“இந்த ஆக்ஸிஜன் செறிவுகள் சுகாதார உள்கட்டமைப்பை அதிகரிக்கும் என்றும், அளவுகள் விரைவாகக் குறையும் போது முக்கியமான ஆக்ஸிஜனை வழங்குவதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்று பொருளாளர் அருண் துமல் கூறினார்.

ஏற்கனவே கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜஙன் உள்பட பல்வேறு உதவிகளை, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ரிஷாப் பந்த், ஹனுமா விஹாரி, ஹார்டிக் பாண்ட்யா, கிருனல் பாண்ட்யா, ஷிகர் தவான் உள்ளிட்ட பல இந்திய வீரர்கள் கொரோனா போரில் உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.