Skip to content
  • Wed. Sep 16th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
விளையாட்டு

பிசிசிஐ பொதுக்குழு கூட்டம் தள்ளி வைப்பு!

Sep 12, 2020
டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டம் இந்த மாதம் இறுதிக்குள் நடத்தப்பட வேண்டிய நிலையில்,   கொரோனா பிரச்சினை காரணமாக இந்த ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டம் காலரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டியது சட்டப்படி கட்டாயம். ஆனால், நடப்பாண்டில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல்வேறு நிகழ்வுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிசிசிஐ கூட்டமும் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ‘கொரோனா பாதிப்பு காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான கால அவகாசத்தை 3 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசின் பதிவுத்துறை அனுமதி அளித்து இருக்கிறது.
அதாவது இந்த (செப்டம்பர்) மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்துக்குள் நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. சங்கங்கள் பதிவு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தை ஆன்-லைன் மூலம் நடத்தக்கூடாது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை உத்தரவில் கூறப்பட்டு இருக்கிறது.
இதனால் பொதுக்குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் தேதி குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Post navigation

தொடக்கத்தில் தடுமாறினாலும் 294 ரன்களை எட்டிய ஆஸ்திரேலியா!
முதல் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி – தொடரில் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா!

Related Post

விளையாட்டு

ஜெய்ஸ்வாலுக்கு தடை விதிக்கப்படுமா? இலங்கை வீரருடன் மோதல் – ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

உலகம் விளையாட்டு

காமன்வெல்த் போட்டிக்குப் பின்… பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர் மாயம்…

உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer