வாஷிங்டன்: அளவுக்கு அதிகமாக உடலைத் சுத்தம் செய்வது உடல் நலத்தை பாதிக்கும் என்று அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், “குளிக்கும் பழக்கமே இல்லாதவர்கள், மற்ற மனிதர்களை விட ஆரோக்கியமாக இருக்கிறார்கள்” என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
நம் உடலின் மேல், அழுக்கு படர்ந்துவிடுவதாகவும் அவ்வப்போது சுத்தப்படுத்த வேண்டும் என்றும் நினைக்கிறோம். உடலைக் கழுவுவதும், குளிப்பதும் நமது பழக்கமாக உள்ளது.
ஆனால் “அதீத குளியல் உடலுக்கு ஆகாது” என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று.
அதாவது நமது உடம்பின் மேல் இருக்கும் நல்ல நுண்ணுயிர்கள், கிருமிகள் ஆகியவை தினமும் உடலின் செயல்பாட்டைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன. இவை நோய் வருவதில் இருந்து பாதுகாக்கின்றன.
நாம் அடிக்கடி உடலை கழுவினாலோ, குளித்தாலோ, இந்த நல்ல கிருமிகள் அழிந்து போகிறது. இதனால் உடல் உபாதைகள் ஏற்படுகின்ற. குறிப்பாக, வயிறு செரிமானம் இன்மை, நோய் எதிர்ப்பு குறைவது, இருதயம் பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன.
தவிர, நாம் அன்றாடம் உபயோகிக்கும் சோப்பு, ஷாம்பூ போன்றவை உடலில் உள்ள எண்ணெய்ப் பசை மற்றும் நுண்ணுயிர்களைம் அழித்துவிடுகின்றன” என்கிறது அந்த ஆய்வு.
அதோடு ஆச்சரியகரமான தகவல் ஒன்றையும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அமேசான் வனப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு குளிக்கும் பழக்கமே இல்லை. அவர்களது உடம்பில் எந்தவொரு மனிதனுக்கும் இல்லாத நல்ல நுண்ணியிர்கள் காணப்படுகிறாதாம். இதனால் அவர்கள் மிக ஆரோக்கியமாக வாழ்கிறார்களாம்.
இதன் மூலம் மனிதன் குளிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை இந்த ஆய்வு முடிவு கூறுகிறது.
அதே நேரம், “இயற்கை சூழலில் வாழும் ஆதிவாசிகளுக்கு வேண்டுமானால் இது சரியாக இருக்கலாம். நகர வாழ்க்கை வாழும் நமக்கு, நமது உடலில் படியும் வியர்வை, தூசி, அழுக்கு, புகை போன்றவற்றை அகற்ற நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ஒரு முறையாவது குளித்து தான் ஆக வேண்டும்.
அதே நேரம் ரசாயனம், விலங்கு கொழுப்பு போன்றவை இல்லாத சோப்பு, ஷாம்புகளை பயன்படுத்தலாம். அல்லது. கடலை மாவு, சீகக்காய் போன்றவற்றை பயன்படுத்தினால்தான் நம் உடலை பாதுகாக்க முடியும்” என்ற கருத்தும் நிலவுகிறது.