குற்றாலம்
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்குக் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது..
ஒவ்வொரு ஆண்டும்தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான பருவம் நிலவும். இத்தகைய ரம்மியமான சூழலில் குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளிப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும்.
எனவே இந்தக் கால கட்டத்தில் குற்றால அருவிகளில் குளித்து மகிழ தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் தற்போதும் அருவியில் சீராகத் தண்ணீர் வரத்து இருந்ததால், சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்ததால், அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த மழையின் காரணமாக அருவிகளில் தற்போது கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.