உலகம் முழுவதும் மொழிகளுக்குள் அடிப்படை தொடர்பு: நிபுணர்கள் கண்டுபிடிப்பு!

Must read

 image03
மொழியியல் அறிஞர்கள் உலகம் முழுவதுமுள்ள மொழிகளை ஆராய்ந்ததில் உலக மொழிகளில் மூன்றில் இரண்டு பங்கு மொழிகளில் சில பொருட்களையும், செயல்களையும் குறிக்கும் சொல்லுக்கான அடிப்படை ஒலி பொதுவானதாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
உடல் உறுப்புகள், இயற்கையின் அம்சங்கள் மற்றும் குடும்ப உறவுகளை குறிக்கும் சொற்களுக்கான அடிப்படை ஒலி பெரும்பாலான மொழிகளில் ஒரே மாதிரியாக இருப்பது வியக்க வைக்கிறது. இதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் இந்த ஒற்றுமை இருப்பது மட்டும் உண்மை என்கிறார் நியூயார்க்கின் கோர்நெல் பல்கலையைச் சேர்ந்த மொழியியல் வல்லுநர் கிறிஸ்டியன்சென்.
உதாரணத்துக்கு மூக்கை (nose, nasal) குறிக்கும் சொல்லில் “neh” அல்லது “oo” என்ற எழுத்து இருப்பதாக கண்டறிந்துள்ளனர். (ம்+ஊ=மூ – மூக்கு), மண்ணைக் (sand) குறிக்கும் சொற்களில் “s” என்ற பொது உச்சரிப்பாக இருப்பதாகவும், சிவப்பை(Red) குறிக்கும் சொல்லில் “r” பொது உச்சரிப்பபாக இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் உடல் உறுப்புகளை குறிக்கும் சொற்களில்தான் அதிக ஒற்றுமை இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதேபோல பிரதிபெயர்சொற்களை (pronouns) குறிக்கும்  சொற்கள் சில ஒலிகளை தவிர்ப்பதிலும் மிகப்பெரிய ஒற்றுமை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
உதாரணமாக “l” என்ற எழுத்தில் துவங்கும் சொற்கள் “u”, “p”, “b”, “t”, “s”,”r”, “l” போன்ற எழுத்துக்கள் எழுப்பும் ஒலியை தவிர்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக கணக்கிடப்பட்டதில் 100 சொற்கள் அனைத்து மொழிகளிலும் ஒரே போல இருப்பதாக கிறிஸ்டியன்சென் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நடைபெறும் ஆராய்ச்சிகள் பேச்சு மற்றும் மொழிகள் உருவான வரலாறு பற்றிய பல கேள்விகளுக்கான விடையை தரும் என நம்பலாம்.

More articles

Latest article