சென்னை:
மழைநீர் வடிகால் பள்ளங்கள் அருகில் தடுப்பு வைக்க வேண்டும், தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள், கழிவுநீர் காவல்வாய்கள், மெட்ரோ ரயில் பணிகள் என எங்கு பார்த்தாலும் பள்ளங்கள் தோண்டப்பட்டு, பெரும்பாலான சாலைகள் ஒருவழிப்பாதைகளாக மாற்றப்பட்டு உள்ளன. இதனால், போக்குவரத்து நெரிசல் உள்ளதுடன், மழை நேரத்தில், மழைநீர் தேங்குவதால் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் விபத்துக்களும் ஏற்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு
கடந்த இரு நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில், உதவி ஆசிரியராக பணியாற்றி வந்த 24 வயதான முத்துகிருஷ்ணன், காசி தியேட்டர் அருகே தோண்டப்பட்டிருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் இராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில், மழைநீர் வடிகால் பள்ளங்கள் அருகில் தடுப்பு வைக்க வேண்டும், தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.