புது டெல்லி:
துவரை இல்லாத வகையில், முதல்முறையாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பூஜியம் குறையும் என்று பார்க்லேஸ் கணித்துள்ளது.

இதுகுறித்து வளர்ந்து வரும் சந்தை ஆராய்ச்சி நிறுவனமான பார்க்லேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020 காலண்டர் ஆண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2.5 சதவீதத்திலிருந்து 0.0 சதவீதமாகக் குறைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்க்லேஸ் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பை 2.5 சதவீதத்திலிருந்து 0.0 சதவீதமாகவும், முந்தைய நிதியாண்டில் 3.5 சதவீதத்திலிருந்து நிதியாண்டு 20-21 க்கு 0.8 சதவீதமாகவும் இருக்கும் என்றும் பார்க்லேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து இந்தியா நீண்ட முழுமையான ஊரடங்கிற்கு செல்வதால், ​​பொருளாதார தாக்கம் நாம் முன்பு எதிர்பார்த்ததை விட மோசமாக இருக்கும் என்று பார்க்லேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

“பல சேவைத் துறைகளில் ஏற்பட்ட சீர்குலைவோடு இணைந்து, பொருளாதார இழப்பு 234.4 பில்லியன் டாலருக்கு (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.1 சதவிகிதம்) இணையாக இருக்கும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம் என்று தெரிவித்துள்ள பார்குலேஸ் நிறுவனம், குறைந்தபட்சம் மே இறுதி வரை இந்தியாவில் ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாகவே கருதுவதாகவும் தெரிவித்துள்ளது.

இது முன்னர் மதிப்பிடப்பட்ட 120 பில்லியன் டாலர்களை விட மிக அதிகம். இதன் விளைவாக, எங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பை 0.0 சதவீதமாகவும், நிதியாண்டு 20-21 க்கு 0.8 சதவீதமாகவும் குறைப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கை மே 3 வரை நீடிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இன்று காலை 10 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர் ஊரடங்கை 19 நாட்கள் நீட்டிப்பு அறிவிப்பை அவர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.