சென்னை:
சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில், கள நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் தீவிரமாக பரவி வருகிறது. அதே சமயம் மற்ற மாவட்டங்களில் ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பி வருகின்றன. அதன்படி கடந்த 19ந்தேதி முதல் அழகு நிலையங்கள், முடி திருத்தும் கடைகள் சென்னை தவிர்த்து மற்ற பகுதிகளில் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கக் கோரி முடி திருத்துவேர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான தமிழகஅரசு வழக்கறிஞர், சென்னையில் கொரோனா தற்று பரவல் தொடர்பான கள நிலவரங்களை ஆய்வு செய்து சலூன் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளது.
இதனையடுத்து, தமிழக அரசு மே 28ம் தேதி விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 8ஆம் தேதி நீதிபதி தள்ளிவைத்தார்.