அமர்நாத்:

இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத்துக்கு பக்தர்கள் ஜுலை 1 முதல் யாத்திரையாக வருவார்கள். ஒன்றரை லட்சம் பக்தர்கள் இதற்காக தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.

கடந்த 1-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் முதல் பிரார்த்தனையில் கலந்து கொண்டார். மாநிலத்தின் அமைதிக்காக அவர் வேண்டிக் கொண்டார்.

இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சிஆர்பிஎஃப் ஐஜி ரவிதீப் சங் சாஹி கூறும்போது, ஆளில்லா விமானம் உட்பட பெயர் வைக்கப்படாத வான் கண்காணிப்பு வாகனங்கள், பார்கோடு, சாட்டிலைட் கண்காணிப்பு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்.

பக்தர்கள் யாத்திரை செல்லும் பகுதி முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். இம்முறை பாதுகாப்புப் படை வீரர்கள் அதிக அளவில் அழைக்கப்பட்டுள்ளனர் என்றார்.