
டில்லி,
டில்லியில் நாளை வழக்கறிஞர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட இருப்பதால், அரசியல் கட்சியினர் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2ஜி முறைகேடு வழக்கில் தீர்ப்பு வெளியாகுமா என கேள்வி எழுந்துள்ளது.
நாளை (21ந்தேதி) டில்லி பார் அசோசியேசன் சார்பில் ஒருநாளை வேலை நிறுத்தம் அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை எந்தவொரு வழக்கறிஞரும் கோர்ட்டில் ஆஜராக மாட்டார்கள் என்றும், எந்தவொரு வழக்கிலும் பெயில் கிடைக்காது, அதுபோல எந்த வழக்கிலும் ஸ்டே கிடைக்காது என்றும் அறிவித்துள்ளனர்.
நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் நாளை ( 21ந்தேதி )காலை 10.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்துள்ள நிலையில், நாளை தீர்ப்பு வழங்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
அதுபோல, இரட்டை இலைக்கு லஞ்சம் வழங்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கிலும் நாளை டிடிவி தினரகன் ஆஜராக டில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நாளை டிடிவி தினகரன் ஆஜராவாரா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.
நளை சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தற்போது டில்லி பார் அசோசியேஷன் வேலை நிறுத்தம் காரணமாக திமுக மற்றும் டிடிவி தினகரன் நிம்மதி அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]