டேராடூன்

டேராடூன் பகுதியில் உள்ள 150க்கும் மேற்பட்ட கோவில்களில் இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி இல்லை என எழுதப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காசியாபாத் நகரில் உள்ள தாஸ்னா என்னும் பகுதியில் தாஸ்னா தேவி ஆலயம் அமைந்துள்ளது.   இரு தினங்களுக்கு முன் இந்த கோவிலுக்குள் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த பதின்ம வயது சிறுவன் சென்று அங்குள்ள குழாயில் நீர் பருகி உள்ளான.   அதற்காக அந்த சிறுவன் அடித்து உதைக்கப்பட்டு அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது.

அதையொட்டி இந்த கோவிலின் தலைமை அர்ச்சகரான யதி நரசிம்மானந்த் சரஸ்வதி என்பவர் “இஸ்லாமியர்கள் உள்ளே வர அனுமதி இல்லை” என அறிவிப்புப் பலகையை வைத்துள்ளார்.   இதற்கு பிறகு இம்மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் வலது சாரி அமைப்பான இந்து யுவ வாகினி அமைப்பினர் இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி இல்லை என எழுதப்பட்ட பேனர்களை வைத்துள்ளனர்.

டேராடூனில் மட்டும் இவ்வாறு  150க்கும் மேற்பட்ட கோவில்களில் இவ்வாறு பேனர்கள்  வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து இந்து யுவ வாகினி மாநில செயலர் ஜீது ரந்தாவா, “தாஸ்னா ஆலயத்தில் இஸ்லாமியச் சிறுவன் தாக்கப்பட்ட பிறகு நடந்த கலவரத்தில் உள்ளூர் பகுஜன் சமாஜ் சட்டப்பேரவை உறுப்பினரான தௌலானா அஸ்லாம் சவுத்ரி அந்த கோவில் அவருடைய மூதாதையருக்கு சொந்தமானது என தெரிவித்தார்.  மேலும் அந்த கோவிலுக்குள் யதி நரசிம்மானந்த் சரஸ்வதியால் வைக்கப்பட்ட அறிவிப்பை அகற்றினார்.

நாங்கள் யதி நரசிம்மானந்த் சரஸ்வதிக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புகிறோம்.   எனவே நாங்கள் இதே மாதிரி அறிவிப்பை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் வைத்துள்ளோம்..   கோவில் என்பது சனாதன தர்மத்தை நம்புவோருக்காக அமைக்கப்பட்டுள்ளன.  எனவே வேற்று மதத்தினருக்கு அங்கு அனுமதி இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.