பொதுக்கூட்டங்களில் பேனர், கட்அவுட், வாகனங்களில் ஆட்களை அழைத்து செல்வதற்கு தடை: உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு

Must read

மதுரை:

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சியினர், வேன்களில் ஆட்களை அழைத்துச்செல்ல உயர்நீதி மன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

அரசியல் கட்சியினர் தேர்தல் காரணமாக பெரிய பெரிய பேனர்கள், கட்அவுட்கள் வைத்து வரு கிறார்கள். இது மக்களுக்கு இடையூறாக உள்ளது. ஆகவே பேனர்கள், கட்அவுட்கள், ஆட்களை அழைத்து வருதல் போன்றவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையை தொடர்ந்து,  பொதுக்கூட்டங்களில் பேனர், கட்அவுட், வாகனங்களில் ஆட்களை அழைத்து செல்வதற்கு தடை விதிப்பதாக  உயர்நீதி மன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அதன்படி, தமிழகத்தல் அரசியல் கட்சியினர், பொதுக்கூட்டங்களில், கட்அவுட், பிளக்ஸ் பேனர்கள் மற்றும், கூட்டத்தை காண்பிக்கும் வகையில் பணம் கொடுத்து மக்களை வாகனங்களில் அழைத்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

More articles

Latest article