மதுரை:
தமிழ்நாடு முதலமைச்சரை குறிப்பிட்டு பேசிருந்தால் 50 நாட்கள் ஓட வேண்டிய படம் 25 நாட்களே ஓடும் என நடிகர் விஜய்க்கு மதுரை அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் மதுரை மேயருமான ராஜன் செல்லப்பா மிரட்டல் விடுத்துள்ளார்.
மதுரை வண்டியூரிலுள்ள உள்ள தனியார் கல்யாண மகாலில் வைத்து அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசணை கூட்டம் மதுரை வடக்கு சட்மன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமை யில் நடைபெற்றது.
அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழகத்தில் முதல்வர், துணை முதல்வர் தலைமையில் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
உள்ளாட்சித்தேர்தல் நடைபெறுவதற்குரிய கருத்துக்களை உள்ளாட்சித்துறை அமைச்சர், முதல்வர், துணை முதல்வர் தெரிவித்துள்ளனர் அதனடிப்படையில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினோம்.
மதிப்பிற்குரிய திரைப்பட நடிகர் விஜய் ஒரு கருத்தை சொல்லிருக்கிறார். அதற்கான விமர்சனங் களை எங்கள் கட்சியின் நிர்வாகிகள் அமைச்சர்கள் பதிலளித்துள்ளனர். ஏற்கனவே சர்கார் படத்தில் ஜெயலலிதாவின் திட்டத்தை மாசுப்படுத்தி பேசியிருப்பதை நாங்கள் அமைதியான முறையில் எதிர்த்தோம்.அதனால் சில காட்சிகளை திரும்ப பெற்றார்கள்.
ஆனால் தொடர்ந்து அவர் அதே நோக்கத்தோடு பேசியுள்ளதற்கு எங்கள் அமைச்சர்கள் தக்க பதிலை கொடுத்துள்ளனர். நடிகர் விஜய் கூறிய யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே உட்கார வைக்க வேண்டும் என்ற கருத்தை பரவலாக பார்க்கிறேன். அவர் அண்ணா திமுகவை எதிர்க்கிறார், முதலமைச்சரை எதிர்க்கிறார் என சில பேர் நினைத்து கொண்டுள்ளனர்.
ஆனால் என்னை பொறுத்தவரை நடிகர் விஜய் உலகளவில் படத்தை வெளியிட்டு வருகிறார். அமெரிக்காவிலும் அவர் படத்தை வெளியிட்டு வருவதால் எந்த நோக்கத்தில் பேசினார் எனத்தெரியவில்லை.
நடிகர் விஜய் ஒரு காலத்தில் திமுக ஆதரவாளராக இருந்திருக்கிறார். தயநிதி மாறனோடு இணைந்து டெல்லியில் பேட்டி கொடுத்திருக்கிறார். நடிகர் விஜய் திமுக ஆதரவையோ அல்லது பதவியையோ எதிர்பார்த்து பேசியிருக்கலாம். ஸ்டாலின் மகன் உதயநிதியை இளைஞரணி பொறுப்பில் அமர வைத்ததை தான் நடிகர் விஜய் அவ்வாறு பேசி உள்ளார்
எந்த தகுதியும் இல்லாமல், எந்தப்பொறுப்பும் இல்லாமல், கட்சிப்பணி ஆற்றாமல் ஏதோ படம் நடித்தார் என்பதற்காக அண்ணா உருவாக்கிய வரலாற்று சிறப்புமிக்க திமுகவுக்கு இளைஞரணி செயலாளர் ஆக்கியுள்ளார் ஸ்டாலின் அதை மறைமுகமாக விமர்சனம் செய்யும் நோக்கில் தான் நடிகர் விஜய் அவ்வாறு பேசியுள்ளார்*
நடிகர் விஜய் அமெரிக்க அதிபர் டிரம்பை குறிப்பிட்டு கூட அவ்வாறு பேசியிருக்கலாம். அமெரிக்கா வில் அவர் படம் திரையிடப்படுவதாலும், அமெரிக்க ரசிகர்கள் இருப்பதாலும் டிரம்பை குறிப்பிட்டு கூடஅவ்வாறு பேசியிருக்கலாம். டிரம்பை பேசியிருந்தால் அவர் நிலைமை என்னவென்று நமக்கு தெரியும்
இந்திய பிரதமரை குறிப்பிட்டு சொல்லியிருந்தால் அவருக்கு ஆபத்து காத்திருக்கிறது என்று அர்த்தம்
தமிழ்நாடு முதலமைச்சரை குறிப்பிட்டு பேசிருந்தால் 50 நாட்கள் ஓட வேண்டிய படம் 25 நாட்களே ஓடும்
இது போன்று பேசினால் மக்கள் அந்த படத்தை வெறுத்துவிடுவார்கள். வெறும் 20 நாளே படம் ஓடும். 4 நாட்கள் மட்டுமே விஜய்யின் ரசிகர்கள் அவர் படத்திற்கு ஆர்ப்பாட்டம் செய்வார்கள். ஐந்தாவது நாள் யாரும் இருக்க மாட்டார்கள் அதனால் விஜயின் படம்பிகில் பிகிலாகத்தான் ஆகும். நல்லாட்சி வழங்கும் முதல்வரை விமர்சனம் செய்து பேசினால் விஜயின் படத்திற்கு தான் வசூல் குறையும்
படத்திற்கு வசூல் குறைந்தால் அரசுக்கு வருமானமும் குறையும். ஆகவே விஜய் அவருடைய திரைப்பட பணியை மட்டும் பார்ப்பது நல்லது வரலாற்றில் பாக்யராஜ் டி.ராஜேந்தர் கமல் முதற்கொண்டு எல்லா நடிகர்களுடைய கட்சியும் எங்கே போய் எப்படி இருக்கிறதென்று எல்லோருக்கும் தெரியும் இனி புதிதாக கட்சி தொடங்கும் நடிகர்களின் கட்சிகள் இரண்டு மூன்று விழுக்காடு மட்டுமே வாங்க வாய்ப்புண்டு.
தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக திமுகவுக்கும்தான் எப்போதும் போட்டி.
இவ்வாறு அவர் கூறினார்.
-பொதிகை குமார்