சென்னை:
உள்ளாட்சிப் பகுதி, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் உத்தரவு காரணமாக தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 1,700 கடைகள் மூடப்பட்டன. உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாநில அரசுகள் தாக்கல் செய்த மேல்முறையீடு காரணமாக, உச்ச நீதி மன்றம் சில விலக்குகள் அளித்ததை தொடர்ந்து, மூடப்பட்ட கடைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன.
இதுகுறித்து வழக்குரைஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அதைத்தொடர்ந்து, உள்ளாட்சிப் பகுதி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்க தடை விதிக்கப்படுகிறது.
இந்த வழக்கு குறிதது தமிழக அரசு விளக்கம் அளிக்கும் வரை புதிய டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்றும் வரும் 20-ம் தேதி வரை தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் அதிரடி ஆணை பிறப்பித்துள்ளது.