கொல்கத்தா: கடந்த மார்ச், 2020 வரையிலான காலக்கட்டம் வரை, வேண்டுமென்றே கடன் செலுத்த தவறியவர்களின் ரூ.62,000 கோடி மதிப்பிலான கடன்களை, வங்கிகள் ரைட்-ஆஃப் செய்திருப்பதாக ஆர்டிஐ அடிப்படையில் கேட்கப்பட்ட தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.

ரைட் ஆஃப் என்பது, செலுத்தப்படாத வங்கிக் கடன்கள் பற்றிய குறிப்பாகும். அதாவது, அதை தள்ளுபடி செய்யாமல், கடனைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று ஆவணத்தில் குறித்து வைப்பதாகும்.

அதாவது, கடனைத் திரும்பப் பெறும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும், எதிர்காலத்தில், கடன் திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவிப்பதாகும்.

அந்தப் பட்டியலில், ஜதின் மேத்தாவின் வின்சம் டயமன்ட்ஸ் & ஜூவல்லரி நிறுவனம் முதன்மையானது என்று கூறப்பட்டுள்ளது.

பிஸ்வநாத் கோஸ்வாமி என்ற சமூக செயல்பாட்டாளர், ஆர்டிஐ சட்டத்தின் அடிப்படையில் கேட்ட கேள்விக்கு, இந்த பதிலை அளித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

இதன்படி, மெஹுல் சோக்ஸிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் என்ற நிறுவனத்திற்கு, ரூ.5,071 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன. ஆனால், இந்த நிறுவனம் வாங்கிய கடனில் ரூ.622 கோடியை வங்கிகள் ரைட் ஆஃப் செய்துள்ளன.

இப்பட்டியலில், பாசுமதி அரிசி தயாரிக்கும் ஆர்இஐ அக்ரோ, ரசாயன நிறுவனமான குடோஸ் கெமி, சூம் டெவலப்பர்ஸ், ஏபிஜி ஷிப்யார்ட் போன்ற நிறுவனங்களும் இப்பட்டியலில் உள்ளன.