டில்லி,
ற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில், வங்கிகளுக்கு தொடர்ந்து விடுமுறை வருவதால் பொது மக்கள் மேலும் பாதிப்பு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று முதல் 500ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த பிறகு, பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மாற்ற முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
govt
வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க கடைக்கு சென்றால் பிரச்சினை, சாப்பிட ஹோட்டலுக்கு சென்றால் பிரச்சினை, பெட்ரோல் போட பங்குக்கு சென்று, 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொன்னால் மீதி பணம் தர மாட்டேன் என்கிறார்கள்.
அத்தியாசிய பொருட்களான மருந்து, மருத்துவமனை, ஆட்டோ, டாக்சி எங்கு சென்றாலும் பிரச்சினை… பிரச்சினை… பிரச்சினை….
இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். மோடியை வசைபாடி வருகிறார்கள்.
bank2
இதற்கிடையில்,
இன்று முதல் புதிய நோட்டுக்கள் மாற்ற வேண்டியதிருப்பதால் இரண்டு நாட்கள் ஏடிஎம் இயந்திரங்கள் வேலை செய்யாது என்றும், இன்று வங்கிகள் செயல்படாது என்றும் அறிவித்திருந்தனர்.
ஆனால், நாளையும் வங்கிகள் வேலை செய்வது கடினம் என்று கூறப்படுகிறது.
காரணம் புதிய ரூபாய் நோட்டுகளை கணக்கில் வரவுவைத்து, அதற்கான பண பரிமாற்றம் குறித்து தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டியதிருக்கும். இந்த நேரத்தில் பொதுமக்களின் தேவைகளை கவனிக்க முடியாத சூழலே ஏற்படும் என்று வங்கி பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.
bank1
இதன்படி பார்த்தால், இன்று (9ந்தேதி), நாளை (10ந்தேதி )யும் வங்கிகள் செயல்பட இயலாத சூழலே நிலவுகிறது.
நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை மட்டுமே வேலை நாள். அதற்கு அடுத்த நாள்  
இரண்டாவது சனிக்கிழமை (12ந்தேதி) அன்று வங்கி களுக்கு விடுமுறை,
அதற்கடுத்த நாள் (13ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை, வங்கி களுக்கு விடுமுறை.
ஆகவே தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாத சூழல் வருவதால், பொதுமக்களின் பாடு திண்டாட்டம் தான்.
இடையில் ஒருநாள் மட்டுமே வங்கிகள் வேலை செய்கிறது. அன்று எத்தனை பேருக்கு பணப்பட்டுவாடா செய்ய முடியும்..,. 
அதைத்தொடர்ந்து வருகிற 14ந்தேதி குருநானக் ஜெயந்தி வருகிறது. அன்றும் மத்திய அரசு விடுமுறை. வங்கிகள் வேலை செய்யாது.
இதுபோன்ற தொடர் விடுமுறைகளால் வங்கிகளில் பணம் செலுத்துவதும், பணம் பெறுவதும் பொது மக்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். இதன் காரணமாக ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதால், ஏற்கனவே பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்கள் மேலும் மேலும் சிரமத்திற்கு ஆளாவார்கள்.
இதை, மத்திய அரசு உயர் அதிகாரிகள், மற்றும் வங்கிகளின் உயர் அதிகாரிகள் கவனத்தில் கொண்டு,
வங்கிகளின் விடுமுறையை ரத்து செய்தும்,
டிசம்பர் 30ந்தேதி வரை இரவு 9 மணி வரை பொதுமக்கள் நலன் கருதி  பணி செய்யவும்,
பணம் மாற்றுவதற்கு வசதியாக வங்கிகளில் சிறப்பு கவுண்டர்கள் பல திறந்து பணிபுரியவும் உத்தரவிடுமாறு  பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
வங்கி அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் பொதுமக்களின் ஆதங்கத்தை புரிந்துகொண்டு ஆவன செய்ய வேண்டும் என்றும்…
மக்களின்  சிரமத்தை தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.