டில்லி:
‘‘வங்கிகள் பணியக வாரியத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும். என்று வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வினோத் ராய் கூறுகையில், ‘‘வங்கிகள் பணியக வாரியம் (பிபிபி) தொடங்கியது முதல் பணியாளர் நியமன குழுவாக தான் செயல்படுகிறது. அதனால் தான் இதன் பிரிந்துகைள் மீது மத்திய அரசு எவ்வித கவனமும் செலுத்துவது இல்லை. அதோடு மத்திய நிதியமைச்சகத்திற்கும் பிபிபி.க்கும் இடையிலான தொடர்பு சரியான முறையில் இல்லை. பொதுத் துறை வங்கிகள் தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்க சில அதிகாரங்களை வழங்க வேண்டும்’’என்றார்.
வங்கி நடைமுறையில் ஏற்படும் மோசடி விவகாரங்களை கையாள கூடுதல் அதிகாரம் வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ள நிலையில், முன்னாள் சிஏஜி.யும் பிபிபி ஆலோசகருமான வினோத் ராய் இத்தகைய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ‘‘ பொதுத் துறை வங்கிகள் நிர்வாக நடைமுறையில் பிபிபி.யின் பரிந்துரைகளை அரசு தீவிரமாக செயல்படுத்த வேண்டும். பிபிபி.க்கும் அரசுக்கும் இடையே இயற்கையான உறவு முறை அவசியமாகிறது’’என்றார்.
பொதுத் துறை வங்கி உயர் அதிகாரிகள் நியமனத்திற்காக 2016ம் ஆண்டு பிபிபி.க்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்தார். பொதுத் துறை வங்கிகளின் வளர்ச்சிக்கு அதன் இயக்குனர்களுடன் ஆலோசித்து முடிவுகளை எடுக்கும் பணியிலும் பிபிபி ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டது.
[youtube-feed feed=1]