டில்லி,

ண மதிப்பிழப்பு அறிவித்த பிறகு பணம் எடுக்க, வங்கியில் டெபாசிட் செய்ய கடும் கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது மத்தியஅரசு.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான அறிவிப்பை வெளியிட்டு மக்களை குழப்பி வருகிறது மத்திய அரசு.

இந்நிலையில் வரும் ஏப்ரல் முதல் வங்களில் செய்யப்படும் பண வர்த்தனை குறிப்பிட்ட அளவுக்கு மேல் பரிவர்த்தனை செய்தால் அதற்கு கட்டணம் விதிக்கப்படும் என  அறிவித்து உள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட சில வங்கிகள், மாதத்தில் 4 தவணைகளுக்கு மேல் பணம் எடுத்தாலும், செலுத்தினாலும் 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கின்றன.

வங்கிப் பணப் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் விதிப்பதற்கு முடிவு செய்திருப்பது பிற்போக்குத் தனமான நடவடிக்கை என்றும், வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது பணத்தை ஒரே தவணையில் எடுத்துவிட்டால், வங்கிகள் மகிழ்ச்சியடையுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வங்கிகளின் இந்த அறிவிப்பு  வாடிக்கையாளர்கள் தரப்பில் கடும்  அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.