டெல்லி: வங்கி ஊழியர்களின் ஸ்டிரைக் காரணமாக இந்த வாரம் (28ந்தேதி) சனிக்கிழமை முதல் 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை ஆகியது. வரும் வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என பணியாளர் சம்மேளளம் அறிவித்து உள்ளார்.

வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வாரத்தில் 5 நாட்கள் வேலையை அறிமுகப்படுத்த வலியுறுத்தி வருகின்றனர். மேலும்,  அனைத்து பணியாளர்களிலும் போதுமான ஆட்சேர்ப்பு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றுதல் உள்ளிட்ட பல அம்சங்களை கோரி வருகிற ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வங்கி சங்கங்களின் ஐக்கிய மன்றம் (UFBU), நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.  இதுதொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில்,  வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என பணியாளர் சம்மேளன பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

இன்று ககுடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் விடுமுறை.  இதையடுத்து, நாளை ஒருநாள் மட்டும் வங்கிகள் வேலை நாள் உள்ளது. அதைத்தொடர்ந்து, 28, 29ந்தேதி சனி ஞாயிறு விடுமுறையாகும். அதைத்தொடர்ந்து, 30, 31ந்தேதி   வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம். இதனால், அன்றைய தினங்களில் தமிழ்நாடு உள்பட  நாடு முழுவதும் உள்ள அனைத்து பொது வங்கிகளும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

வங்க ஊழியர்களின் போராட்டம் காரணமாக, பொதுத்துறை வங்கிகள் செயல்படாது என்பதால், அரசு ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளம் பெறுவதிலும் தாமதம் ஏற்படலாம் என தெரிகிறது.

காலிப் பணியிடங்களை நிரப்ப வங்கி நிர்வாகங்கள் போதிய எண்ணிக்கையில் பணியாளர்களை நியமிக்கவில்லை என்று குற்றம் சாட்டும் வங்கி ஊழியர் சம்மேளனம், இதனால்,  தற்போதுள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பணிச்சுமை அதிகரித்து, “ஊழியர்களின் விரக்திக்கும், வீழ்ச்சிக்கும் வழிவகுக்கிறது” என்று குற்றம் சாட்டி உள்ளது.