டில்லி
வாடிக்கையாளர்கள் வாங்கிய கடனை குண்டர்கள் மூலம் மிரட்டி வசூலிக்க வங்கிகளுக்கு அதிகாரம் கிடையாது என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

பல வங்கிகளில் கடன் வாங்கியோர் திருப்பி செலுத்த தவறினால் அதை வசூலிக்க குண்டர்களை வங்கி நிர்வாகம் வீட்டுக்கு அனுப்புவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவர்கள் கடன் தொகையை கேட்டு அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் மிரட்டுவது வழக்கமாக உள்ளது. அத்துடன் வீட்டு வாசலில் வந்து கூச்சல் போட்டு கடன் வசூலிப்பதும் இவர்களுக்கு வழக்கமாக உள்ளது. இதன் காரனமாக தற்கொலை மரணங்களும் நிகழ்கின்றன.
மக்களவையில் கேள்வி நேரத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர், “வாடிக்கையாளர்கள் கடன் பெற்றுஇருந்தால் குண்டர்களை நியமித்து அவர்களை மிரட்டி வசூல் செய்ய வங்கிகளுக்கு எவ்வித அதிகாரமும் அளிக்கபடவில்லை. ரிசர்வ் வங்கி ஏற்கனவே கடன் வசூலிப்பது குறித்து பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வங்கிகளுக்கு அளித்துள்ளது.
அதன்படி தனியாக உள்ள கடன் மீட்பு நிறுவனங்கள் அல்லது முகவர்கள் மூலம் அல்லது காவல்துறையினர் விசாரணை மூலம் மட்டுமே கடன் வசூல் செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களை கடன் மீட்புநிறுவனங்கள் துபுறுத்துவது, நாகரீகமற்ற கண்னிய குறைவாக பேசுவது, இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் தொந்தரவு செய்வது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.
இதை மீறும் கடன் மீட்பு நிருவனம் மற்றும் முகவர்களுக்கு குறிப்பிட காலத்துக்கு அந்த பகுதிகளுக்கு சென்று கடன் வசூலிக்க தடை விதிக்கப்படும். அத்துடன் இந்த தடையை நீட்டிக்கவும் முடியும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மற்றும் முகவர்களுக்கு முழுத்தடை விதிக்க வழி உண்டு. ” என தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]