மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் மழைநீர் அகற்றும் பணிக்கு  கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.1597 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் மாபெரும் ஊழல் நடைபெற்று இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

காராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த ஓராண்டில் மட்டும் மழைநீர் அகற்றும் பணிக்காக ரூ.1597 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் 2005ம் ஆண்டு கடும் மழை மற்றும் வெள்ளத்தால் மோசமான பாதிப்புகளை  எதிர்கொண்டது, இதில் மும்பை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இந்த மழை வெள்ளத்தால் சுமார் 1,094 பேர் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து மழைக்காலங்களில் நிவாரண பணிகள் மேற்கொள்ளவும், சாலைகளில் தேங்கும் மழைநீரை அகற்றவும் நிதி ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு (2018)  ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு (2019) ஜூன் மாதம் வரை மழை வெள்ளம் காரணமாக பாதிப்பட்டுள்ள வெள்ள நீரை அகற்றும் பணிக்காக ரூ.1597 கோடி  செலவிடப்பட்டு உள்ளதாக முப்பை பெருநகர மாநகராட்சி அறிவித்து உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் மழை வெள்ள நீர் அகற்றும் பணியில்  பாஜக சிவசேனா கூட்டணி மாபெரும் ஊழல் செய்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

இந்த பணிகளை மேற்கொண்டு வந்த முதல் 20 நிறுவனங்கள்,  சுமார் 60 சதவிகிதம் பணிகளை மேற்கொண்டதாகவும், இதற்காக ரூ.938 கோடி செலவிடப்பட்டு உள்ளதாகவும், ஒரே ஒரு நிறுவனத்தின் மூலம் (ஐடி15621) ரூ.117 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.