டில்லி:

ங்கி மோசடிகள் 2018-19ம் நிதி ஆண்டில் 74 சதவீதமாக அதிகரித்து இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டு உள்ளது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கையில், இந்திய ரிசர்வ் வங்கி, தனது உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்க முன் வந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு கடந்த ஆண்டு முதலே கேட்டு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற  ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமை யிலான அதிகாரிகள் கூட்டத்தில், உபரி நிதியை மத்தியஅரசுக்கு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதன்படி,  2018-19 நிதியாண்டுக்கான உபரித்தொகை ரூ.1,23,414 கோடி மற்றும் டிவிடெண்ட் தொகை ரூ.52,637 கோடி என இரண்டும் சேர்ந்து, ரூ.1.76 லட்சம் கோடியை மத்தியஅரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்குவதாக தெரிவித்து உள்ளது.

அதேவேளையில்,  வங்கி மோசடிகள் 2018-19ம் நிதி ஆண்டில் 74 சதவீதமாக அதிகரித்து இருப்பதாகவும், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து உள்ளது.

அதில், . 2017-18ல் நிதி மோசடி ரூ. 41,167 கோடியாக இருந்ததாகவும், அது கடந்த  2018-19 நிதியாண்டில் நிதி மோசடி ரூ.71,543 கோடியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த மோசடிகள் நடைபெற்ற நாளுக்கும், அதை கண்டு பிடிப்பதற்கும்  இடையே 22 மாதங்கள் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறி உள்ளது.

மேலும்,  “வங்கிக் குழுக்களில், வங்கி கடன் வழங்குவதில் மிகப் பெரிய அளவை அரசு வங்கிகளே கொண்டுள்ளன. 2018-19 ஆம் ஆண்டில் பதிவான மோசடிகளில் பெரும்பகுதி அரசு வங்கிகளில் நடந்துள்ளன என்றும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளது.

அதைத்தொடர்ந்து, தனியார் துறை வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளும் நிதி மோசடியில் ஈடுபட்டு  உள்ளன” என்றும் சுட்டிக்காட்டி உள்ளது.

கடன்கள் தொடர்பான மோடிகள் 2018-19 ஆம் ஆண்டு நடந்த மோசடியின் மொத்த தொகைகள் மிக அதிகம் என்று குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி அறிக்கை, கிரிடிட் கார்டு, ஆன்லைன் வங்கி, பிக்சட் டெபாசிட் தொடர்பான மோசடிகள் 2018-19 ஆம் ஆண்டில் மோசடிகளின் மொத்த மதிப்பி 0.3 சதவீதம் மட்டுமே நடைபெற்றிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறி உள்ளது.