சென்னை:
இந்தியா முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள்ள கலந்துகொ;ள்ளும் ஸ்டிரைக் இன்று நடைபெற்று வருகிறது.
வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது, பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் போன்ற வங்கிகளை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கக்கூடாது, வாராக்கடனை உடனே வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று ஸ்டிரைக் நடைபெற்று வருகிறது.
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்ததை தடுக்க, கடந்த 26ந்தேதி டெல்லியில் மத்திய தொழிலாளர் நல ஆணையர் தலைமையில் வங்கி ஊழியர் சங்கத்தினருடன் பேச்சு வார்த்தை நடந்தது.. இதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.
இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் அறிவித்தார். அதையடுத்து திட்டமிட்டபடி இன்று நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள பெரும்பாலான வங்கிகள் இன்று செயல்படவில்லை. ஊழியர்கள் இல்லாமல் வங்கிகள் வெறிச்சோடி கிடந்தன.
ஸ்டிரைக்கையொட்டி இன்று காலை 10.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.