அபுதாபி: கொல்கத்தா அணி நிர்ணயித்த 85 ரன்கள் என்ற இலக்கை 2 விக்கெட்டுகளை இழந்து எட்டி, 8 விக்கெட்டுகளில் வென்றது பெங்களூரு அணி.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெறும் 84 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சர்ச்சைக்குரிய முறையில் 2019 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்த இயான் மோர்கனை கேப்டனாக நியமித்தால், அணி எழுச்சிபெறும் என்று தகவல்கள் பற்றவைக்கப்பட்ட நிலையில், அவ்வாறே நடந்தது.
இதற்கும், தோனி போன்றவர்களோடு ஒப்பிடுகையில், தினேஷ் கார்த்திக், ஒரு கேப்டன் என்ற முறையில் பரவாயில்லை என்ற அளவில் செயல்பட்டு வந்தார்; தனிப்பட்ட முறையில் சிறப்பாக ஆடவில்லை என்றாலும்கூட.
இந்நிலையில், இயான் மோர்கன் பாதியில் பொறுப்பேற்றப் பிறகு, நிலைமை இன்னும் மோசமானதுதான் மிச்சம். இன்றையப் போட்டியில் வெறும் 84 ரன்களே எடுத்து, ஐபிஎல் தொடரின் குறைந்தபட்ச ரன்களை பதிவுசெய்துள்ளது கொல்கத்தா அணி.
இதனையடுத்து, மிக மிக எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணியில், தேவ்தத் படிக்கல் 25 ரன்களும், ஆரோன் பின்ச் 16 ரன்களும், குர்கீரத் 21 ரன்களும், விராத் கோலி 18 ரன்களும் அடிக்க, 13.3 ஓவர்களில் 85 ரன்களை எடுத்து வென்றது பெங்களூரு அணி.