பெங்களூரு,
இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் மேட்ச் பெங்களூர் சின்ன சாமி மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. 189 ரன் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெளியேறியது.
அதையடுத்து மட்டையை பிடித்த ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்தது. எடுத்துள்ளது. தொடர்ந்து நாளையும் ஆட்டம் நடைபெறும்.
இன்றைய ஆட்டத்தின்போது டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. நான் இந்திய வீரர்கள் எதிர்பார்த்தபடி ரன்களை குவிக்க முடியவில்லை. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளரின் ஆனால், ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனின் அபாரமான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இந்திய அணியின் வீரர்கள் ஒவ்வொருவராக மைதானத்தைவிட்டு வெளியேறினர்.
நாதன் லயனின் அபார பந்து வீச்சில் 189 ரன்னில் இந்தியா சுருண்டது. அவர் 50 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் அதிகபட்சமாக 90 ரன்கள் எடுத்தார்.
பின்னர் ஆஸ்திரேலிய அணியினர் முதல் இன்னிங்சை தொடங்கினர்.
இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை அநாயசமாக அடித்து தள்ளினர் ஆஸ்திரேலிய வீரர்கள். இசாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோர் மாறி மாறி பந்துகளை வீசினர். ஆனால் விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை.
முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 23 ரன்னுடனும், ரென்ஷா 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளையும் ஆட்டம் தொடர்கிறது