பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என  என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பெங்களுருவில் செயல்பட்டு வரும் பிரபல உணவகமான   ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் மார்ச் 1ந்தேதி அன்று வெடித்து சிதறியது. இதில், துரதிருஷ்டவமாக  10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம்  நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குண்டு வெடிப்பு  வழக்கை   தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ)  விசாரித்து வருகிறது. இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்திய பயங்கரவாதி, சென்னையில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன்,  குண்டு வைத்த குற்றவாளி அணிந்திருந்த தொப்பி, சென்னை மயிலாப்பூரில் பகுதியில் உள்ள ஒரு மாலில் வாங்கப்பட்டதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, சென்னை உள்பட பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் குற்றவாளிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில்,  இந்த குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த அப்துல் மதீன் தாஹா மற்றும் முசாவிர் ஹூசைன் ஹாசெப் ஆகியோர் மேற்கு வங்க மாநிலத்தில் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவர்கள் வேறு இடங்களுக்கு தப்பிச்செல்லும் வகையில், கொல்கத்தா வந்தபோது, அவர்களை  என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

முசாவிர் ஹூசைன் ஹாசெப்தான் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வைத்தவர். அப்துல் மதீன் தாஹா குண்டுவெடிப்பைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்தல் ஆகியவற்றின் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய சதிகாரர் கைது! என்ஐஏ நடவடிக்கை

பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு குற்றவாளிகள் சென்னையில் தங்கியிருந்தது அம்பலம்! என்ஐஏ பரபரப்பு தகவல்…