சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி, அதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தி, கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக,  கட்சியிலிருந்து நீக்கி கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

இதை எதிர்த்து புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பு தனது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் உள்ளதாகவும், எடப்பாடி, ஓபிஎஸ்-க்கு தன்னை நீக்க உரிமை கிடையாது என்று கூறி அவர்கள் மீது அவதூறு  கூறியிருந்தார்.  இந்த வழக்கின் பல கட்ட விசாரணைகளை தொடர்ந்து, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

புகழேந்தி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.