சென்னை:

பெங்களூர் ஐஐடியில் படித்து வந்த சென்னை மாணவருக்கு ரூ.60 லட்சம் ஆண்டு சம்பளத்தில் பிரபல வலைதள நிறுவனமான கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.

சென்னை அண்ணா நகரில்வசித்து வரும் ரெயில்வே அதிகாரியான கே.என்.பாபு, தமிழகஅரசு துறையில் பணியாற்றி வரும் ஜெயஸ்ரீ தம்பதியினரின் மகன் ஷியாம்.

12-ம் வகுப்பு வரை சென்னையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் சென்னையில் படித்த  ‌ஷியாம் படித்து முடித்தார். மேல் படிப்புக்காக ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு எழுதி அதில் வெற்றி  பெற்று பெங்களூரு ஐஐடியில் ஐஎம்டெக் டுயல் டிகிரி கோர்சில் ( iMtech programme, dual degree சேர்ந்து படித்து வந்தார். தற்போது தனது படிப்பை முடிக்கும் நிலையில், அங்கு நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் கூகுள் நிறுவனத்தில் ரூ.60 லட்சம் சம்பளத்தில் பணிக்கு தேர்வு பெற்றுள்ளார்.

இவர் படிக்கும்போதே, ‘கோடிங்’ தொடர்பான போட்டிகளில் நண்பர்களுடன் சேர்ந்து பங்கு பெற்றுள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் ஆன்லைன் வீடியோ மூலம் நேர்முகத்தேர்வை எதிர்கொண்டார்.  பின்னர் ஜெர்மன் நாட்டின் முனிச் நகரில் கூகுள் நிறுவனம் நடத்திய நேர்முகத்தேர்விலும்  நேரடியாக கலந்து கொண்டார்.

இந்த நிலையில் அவரை ‘கூகுள்’ நிறுவனம், போலந்து நாட்டில் பணியாற்றுவதற்காக ஷியாமை தேர்வு செய்துள்ளதாகவும், ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சம்பளம் என்றும் அறிவித்து உள்ளத.

இதனால் எல்லையற்ற மகிழ்ச்சியில் துள்ளிய ஷியாம்,  கூகுள், பேஸ்புக் நிறுவனங்களில் வேலை பார்க்கவேண்டும் என்பது என்னுடைய கனவு, ஆசை. அந்த கனவும், ஆசையும் இன்று நிறைவேறிவிட்டது. இதற்கு என்னுடைய அப்பாவும், அம்மாவும்தான் காரணம். அவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவிக்கிறேன் என்று வறியவர் ,போலந்து நாட்டில் பணியாற்றுவதற்காக ‌ஷியாம் அக்டோபர் மாதம் செல்ல இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.