பெங்களூரு,
ஜெயலலிதா மகள் என்று அம்ருதா என்ற இளம்பெண் பொய் சொல்கிறார் என்று டிடிவி தீவிர ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி கூறி உள்ளார்.
ஜெயலலிதா பெற்றெடுத்த மகள் நான்தான் என்று உச்சநீதி மன்றம் வரை சென்ற அம்ருதா என்ற இளம் பெண், தனது தாயார் சைலஜா என்பவர் என்றும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை எனது வீட்டுக்கு அடிக்கடி வந்து ஜெயலலிதா எனது சகோதரி என்று கூறி வந்ததாகவும், தற்போது ஜெ.உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று உச்சநீதி மன்றம் வரை சென்று வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், பெங்களூரை சேர்ந்த டிடிவி ஆதரவாளரான புகழேந்தி, ஜெயலலிதாவுன் சகோதரி என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று கேட்டபோது உறவினர்கள் கூறியதாக அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதாவுடன் எடுத்த ஒரு புகைப்படத்தையாவது ஆதாரமாக கொண்டு வாருங்கள் என்று கேட்டபோது அதுவும் இல்லை என்று கூறி விட்டார்.
அவர் இறந்த பிறகு அவரது மகள் அம்ருதா தற்போது ஜெயலலிதா எனது தாயார் என்று கூறி வருகிறார்.
இது ஒரு ஏமாற்று வேலை.
இவ்வாறு அவர் கூறினார்.