சமீபத்தில் சென்னை திரும்புவதற்கு பெங்களூரு விமான நிலையம் வழியாக வந்தார் இளையராஜா. விமான நிலையத்தில் பயணிகள் சோதனை பகுதியில் அவரது உடமைகளை சோதித்தனர் விமான நிலைய அதிகாரிகள். இளையராஜாவின் பையிலிருந்த சுவாமி பிரசாதங்களை எடுத்துப் பார்த்த அதிகாரிகள், அவற்றை அனுமதிக்க மறுத்து விட்டனர்.
இளையராஜா எவ்வளவோ அது பற்றி விளக்கி சொல்லியும் “நோ” சொல்லிவிட்டனர். இதனால் அதிர்ந்து போன இளையராஜா, அப்படியே அமைதியாகிவிட்டார்.
ஒருமணி நேரம் கழித்து தங்களுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்த அதிகாரிகள் அவரை பிரசாத பொருளுடன் பயணம் செய்ய அனுமதித்தனர்.
இந்த நிகழ்வை நியூஸ் 18 தொலைக்காட்சி, சம்பவத்தை நேரில் கண்ட பயணியின் பேட்டியுடன் பிரத்யோகமாக ஒளிபரப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நல்லவேளை, அதிகாரிகளை “அறிவிருக்கா”னு இளையராஜா கேட்கலை!