டெல்லி:
புகையிலை பொருட்கள் மூலம் கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளதால், அதன் விற்பனையை தடை செய்யுங்கள் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் வலியுறுத்தி உள்ளார்.
இந்தியாவில் தமிழகம் உள்படசில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் தீவிரமாகி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லாததால், மேலும் பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில அரசுகளும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தி கடிதம் எழுத உள்ளார்.
அதில், சிகரெட் அல்லாத புகையிலைப் பொருட்களை மெல்லும் பொதுமக்கள் பொது இடங்களில் எச்சில் துப்புவதால் கொரோனா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்கள் சூவிங்கம், புகையிலை பொருட்களை மென்று பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்ட உள்ளது.
புகைபிடிப்பதும் சுவாச நோய்த் தொற்றுக்கு வழிவகுக்கும், இதனால் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.