சென்னை: ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளால் பணத்தை இழந்து, பின்னர் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இது குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில் அரசு விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இதற்கு பதில் அளித்து அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறி உள்ளதாவது: நீதிமன்ற ஆலோசனையின் படி ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து அரசானது அவசர சட்டம் பிறப்பித்தது. பணம் வைத்து விளையாட மட்டுமே அவசர தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.