டெல்லி:
உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் இருந்து சர்வதே நாடுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ள தடை ஏப்ரல் 14ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 593 ஆக உயர்ந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கையும் 14ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், சர்வதேச விமான போக்குவரத்து மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் ஏப்ரல் 14ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சர்வதேச விமான போக்குவரத்து தடை ஏப்ரல் 14ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. அதுபோல உள்நாட்டு விமான போக்குவரத்து தடை மார்ச் 31ந்தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.