டெல்லி:

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவரை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில்,  இந்திய ரயில்வே துறை,  ரயில் பெட்டிகளை தனி மருத்துவ வார்டுகளாக மாற்றவும் புதிதாக வென்ட்டிலேட்டர்களை தயாரிக்கவும் உதவுவதாக அறிவித்துள்ளது.

கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை, நோயாளிகளுக்கு தேவையான வகையில், ரயில் பெட்டிகளை தனி மருத்துவ வார்டுகளாக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், அதுபோல. சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலை மருத்துவ வென்ட்டிலேட்டர்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.

மேலும்,  கிராமப்பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வைரஸ் பரவல் ஏற்படும் சூழலில் ரயில் பெட்டிகள் மருத்துவ உதவிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் கூறி உள்ளார்.