டில்லி:

ம்.பி.க்கள் அல்லது எம்.எல்.ஏ.க்கள், உச்சநீதிமன்றத்திலோ அல்லது உயர்நீதிமன்றத்திலோ பணியாற்றுகிற எந்த ஒரு நீதிபதிக்கும் எதிராக பதவி நீக்க தீர்மானம் (இம்பீச்மென்ட்) கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தால், அவர்கள் அந்த குறிப்பிட்ட நீதிபதியின் கோர்ட்டில் ஆஜராக முடியாது என்று பார் கவுன்சில் தடை விதித்துள்ளது.

சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றங்களில் வழக்குரைஞராக பணியாற்ற தடை விதிக்க வேண்டும் என்று  உச்சநீதிமன்றத்தில் டில்லி பாரதீய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் அஷ்வினி குமார் உபாத்யாய் வழக்கு தொடுத்துள்ளார்.

இதை விசாரணைக்கு ஏற்ற  உச்சநீதிமன்றம் இதில் இந்திய பார் கவுன்சிலின் பதிலைக் கேட்டது.

இந்த நிலையில், இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஷ்ரா, டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றங்களில் வழக்குரைஞர் தொழில் செய்வதை தடுத்து நிறுத்தவோ, தடை செய்யவோ முடியாது என்பது பார் கவுன்சிலின் முடிவு ஆகும்.

ஆனால், வழக்குரைஞர் தொழில் செய்கிற சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்திலோ அல்லது உயர்நீதிமன்றத்திலோ பணியாற்றுகிற எந்த ஒரு நீதிபதிக்கும் எதிராக பதவி நீக்க தீர்மானம் (இம்பீச்மென்ட்) கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தால், அவர்கள் அந்த குறிப்பிட்ட நீதிபதியின்  நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது” என்றார்.