சென்னை: தமிழகத்தில் மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பு RTPCR சோதனை செய்திருக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி முடிவடைந்த நிலையில், மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. எண்ணப்படுகிறது. தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், கொரோனா பரவலும் அதிகரித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் கடுமையாக விமர்சித்திருந்தது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு,
வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்
எண்ணும் முகவர்கள் 72 மணி நேரத்திற்கு முன் RTPCR சோதனை செய்திருக்க வேண்டும்
அல்லது தடுப்பூசியின் ஒரு டோஸாவது செலுத்தியிருக்க வேண்டும்
என தெரிவித்தார்.