துரை

துரை உயர்நீதிமன்றக்கிளை முஸ்லிம்களை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.

தமிழ்நாடு மாநில பாஜக ஆன்மீக பிரிவு மாநில செயலாளராக உள்ள குருஜி என்பவர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சேர்ந்தவர் ஆவார். குருஜி இஸ்லாமிய மத தூதுவர்களை மற்றும் இஸ்லாமியர்களையும் வழிபாட்டு தர்ஹாகளையும் தவறாக சித்தரித்து, மதக்கலவரத்தை தூண்டும் விதமாக முகநூலில் பதிவுகளை வெளியிட்டிருந்தால், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆயினும் இவரை கைது செய்யாததால் இவரை கைது செய்யக்கோரி அந்த பகுதியைச் சேர்ந்த அகமது பயாஸ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த. மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் இது போன்ற நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ஆனால், இவர் ஏன் கைது செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பியது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை தனிப்படை அமைத்து குருஜியை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குருஜி தன்னை ஜாமினில் விடுவிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,

“இஸ்லாமிய மத தூதுவர்களை தவறாக சித்தரித்து, மதக்கலவரத்தை தூண்டும் விதமாக முகநூலில் பதிவுகளை வெளியிட்ட வழக்கில் கடந்த 7ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறேன். வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருக்கிறேன். சாட்சிகளை கலைக்க மாட்டேன். ஆகவே இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்”

எனக் கோரீயிருந்தார்.

இன்று இந்த மனு நீதிபதி நக்கீரன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆஜராகி இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.  மேலும் இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அகமது பயாஸ் தரப்பிலும் வழக்கறிஞர் ஆதம் அலி ஆஜராகி வாதிட்டார்.

நீதிபதி மனுதாரருக்கு இன்று ஜாமீன் வழங்க மறுத்து அகமது பயாஸ் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கி வழக்கு விசாரணை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Facebook, Muslims, defamatory post, BJP functionary, bail refused,