செங்கல்பட்டு

சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கேளம்பக்கம் சுசில் ஹரி இண்டர்னேஷனல் பள்ளியை அதன் நிறுவனரும் தாளாளருமான சிவசங்கர் பாபா நடத்தி வந்தார்.  அந்த பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு இவர் பாலியல் தொல்லை தந்ததாகப் புகார்கள் எழுந்தன.  இதையொட்டி அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதியவே அவர் தலைமறைவானார்.

அவரை சிபிசிஐடி காவல்துறையினர் டில்லியில் கைது செய்தனர்.   அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இந்த வழக்கு குறித்து சுஷில் ஹரி பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் தொடர்பு உடையவர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இந்நிலையில் சிவசங்கர் பாபா ஜாமின் கோரி மனு செய்தார்.

அந்த மனுவைச் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி விசாரித்து வந்தார்.  இன்று நீதிபதி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சிவசங்கர் பாபாவின் சிறை வாழ்க்கை தொடர்கிறது.