
ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஈராக்கின் ஹவிஜா என்ற நகரிலிருந்து, ஒரு லாரியில் ஏறி தப்ப நினைத்த ஒரு குடும்பமும், அவர்களுடன் ரோந்து காரில் சென்ற ஒரு போலீஸ் அதிகாரியும் சேர்த்து 17 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இரு வெடிகுண்டு தாக்குதல் மூலம் கதற கதற கொன்றுள்ளனர் ஐ.எஸ். தீவிரவாதிகள்.
ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள மொசூல் நகரை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என ஈராக் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இருதரப்பினரும் அடிக்கடி பயங்கரமான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஈராக் ராணுவம் இதுவரை கைப்பற்றிய பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
Patrikai.com official YouTube Channel