_92288767_gettyimages-620131534

கும்ரியத் அல்லதி தி ரிபப்ளிக் என்ற பழமை வாய்ந்த நாளிதழ் துருக்கி அரசுக்கு எதிராக செய்திகள் மற்றும் கேலி சித்திரங்கள் வெளியிட்டு வந்தது. அரசுக்கு எதிராக செயல்படும் ஊடகங்கள் மீது ஏற்கனவே எர்டோகன் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கும்ரியத் அல்லதி தி ரிபப்ளிக் பத்திரிக்கை தொடர்ந்து அதிபர் எர்டோகன் எதிராக செய்தி வெளியிட்டதால், அந்த நாளிதழில் பணியாற்றிய 9 செய்தியாளர்கள் கேலி சித்திரம் வரைந்தவர் உட்பட கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறைக்கம்பிகளுக்கு பின்னால் பொதுமக்களின் உரிமைகள் அடைக்கப்படுவதாக அவர்களுடைய வழக்கறிஞர் கருத்து தெரிவித்துள்ளார். இவர்களை தவிர்த்து குர்து ஆதரவு எச்.டி.பி கட்சியைச் சேர்ந்த 9 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.