சென்னை:

மோசமான சாலைகள் அமைக்கும் ஒப்பந்தரார்கள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை? அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி விடுத்துள்ளது.

தமிழகத்தில் சிறு மழை பெய்தாலே சாலைகள் அனைத்தும் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.  இது தொடர்பாக பெருங்களத்தூரை சேர்ந்த முரளி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், சாலைகளை போடுவதற்கு ஒப்பந்தம் எடுப்பவர்களே அதை செப்பனிட வேண்டும் என்றும் என்று நிபந்தனைகள் உள்ளது. ஆனால், அதை யாரும் கடைபிடிப்பது இல்லை, இது தொடர்பாக காண்டிராக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதி மன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், சாலைகள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் போடப்படுவதாகவும், தற்போது தண்ணீர் லாரிகள் அதிக அளவில் இயக்கப்படுவதால் சாலைகள் சேதமடைந்து உள்ளதாக தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சியின் பதிலில் திருப்தி அடையாத நீதிபதிகள், கடற்கரை சாலையோர நடைபாதைகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் மாற்றப்பட்டு வருவதை கவனித்து வருவதாகவும், . தரமான சாலைகள் போடத் தவறிய பிறகும் அதே ஒப்பந்தக்காரருக்கு சாலை ஒப்பந்தங்கள் ஏன் ஒதுக்கப்படுகின்றன என கேள்வி எழுப்பிய நீதிமன்றம்,தரமாற்ற சாலைகள் அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.

மனு தாரரின் கூற்றுப்படி, மீண்டும் சாலை அமைக்கும்போது, ஏற்கனவே இருந்தர சாலையின் மேலடுக்கு அகற்றப்பட வேண்டியது அவசியம் என்றும், அதன்பிறகு புதிய சாலை போடப்பட வேண்டும். இதுதான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை, ஆனால்,  இது குறித்து நிலையான வழிக்காட்டுதல் இல்லை என்றும் தமிழக அரசு மீது குற்றம் சாட்டினார்.