தூக்குக்குடி பகுதியில் விசமிகள், மக்களை தூண்டிவிடுகிறார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

“20018 வரை ஸ்டெர்லைட் புதுப்பிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்தது. அதை மாநில அரசு நிராகரித்தது. அந்த பகுதி மக்களின் வேண்டுகோளை அம்மாவின் இந்த அரசு சட்டத்துக்கு உட்பட்டு நிறைவேற்றி வருகிறது.

சமூகவிரோதிகளும், எதிர்க்கட்சிகளும் மக்களை திசை திருப்பி தூண்டி விடுகின்றன. இந்த மோசமான சூழ்நிலைக்கு இவர்கள்தான் காரணம்.

துப்பாக்கிச்சூட்டில் இத்தனை பேர் பலியானது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

ஸ்டெர்லைட் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதிலும் ஆலைக்கு எதிராகவே தமிழக அரசு கருத்துக்களை வைத்திருக்கிறது.

சட்டப்படி அணுகி ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுப்போம்” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

மேலும், “ஆக்ரோசமாக கும்பல் வந்தபோது, முதலில் காவல்துறையினர் எச்சரித்தனர், பிறகு தடியடி, அடுத்து கண்ணீர் புகை குண்டு என்று காவல்துறையினர் செயல்பட்டனர். கும்பல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகுந்து தீ வைத்த போது வேறு வழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியாகிவிட்டது” என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.